கத்தியை வைத்து பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது

X

திண்டுக்கல் அருகே வாலிபரின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த 3 இளைஞர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த குமார் என்பவர் ஜம்புலியம்பட்டியை அடுத்த சங்கனம்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குமரேசன், பிரசாந்த், மருதமுத்து ஆகிய 3 பேர் குமாரின் கழுத்தில் கட்டியை வைத்து உடைந்த பீர்பாட்டில் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி சட்டை பையில் வைத்திருந்த ரூ.1000 பணத்தைப் பறித்ததாக குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story