நெமிலி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3வாலிபர்கள் பலி!

X

பைக்குகள் நேருக்கு நேர் மோதி 3வாலிபர்கள் பலி!
நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரத்தை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் பிரியகுமார் ஆகியோர் சென்ற பைக்கும் சேந்தமங்கலத்தில் இருந்து தினேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சென்ற பைக்கும் ஆலப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெற்றிவேல், தினேஷ், பிரியகுமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story