ஆற்காடு அருகே டிரைவர் மீது தாக்குதல் 3 வாலிபர்கள் கைது

ஆற்காடு அருகே டிரைவர் மீது தாக்குதல் 3 வாலிபர்கள் கைது
X
டிரைவர் மீது தாக்குதல் 3 வாலிபர்கள் கைது
ஆற்காடு அடுத்த புங்கனுர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று வழக்கம் போல ஆற்காடு- காஞ்சீபுரம் வழித்தடத்தில் பஸ் ஓட்டிச்சென்றார். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓச்சேரி அடுத்த பெரும்புலிப்பாக்கம் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் வந்தபோது, எதிரே ஒரே மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பஸ்சை வழிமறித்துள்ளனர். பின்பு டிரைவரிடம் வழி விடமாட்டாயா என்று கேட்டுதகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை காலால் உதைத்து, தாக்கி மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக பஸ் டிரைவர் விஜயகுமார் அவளூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதேப்பகு தியைச் சேர்ந்த வீரப்பன் என்கிற கோபி (24), ராஜ்குமார் (23), குமரேசன் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story