நெமிலி அருகே சத்துணவு மையத்தில் 3 சிலிண்டர்கள் திருட்டு

நெமிலி அருகே சத்துணவு மையத்தில் 3 சிலிண்டர்கள் திருட்டு
X
சத்துணவு மையத்தில் சிலிண்டர்கள் திருட்டு
நெமிலி அருகே சேந்தமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மைய அமைப்பாளராக திவ்யா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஏப்.15) காலை திவ்யா சத்துணவு மையத்தை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு 3 கேஸ் சிலிண்டர்கள் திருடுப் போய் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story