முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது

முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது
X
திண்டுக்கல்லில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்கள் கைது
திண்டுக்கல், மேற்கு ரத வீதி, அரசமரம் அருகே மவுன்ஸ்புரம் 4-வது தெரு பகுதியில் நேற்று மண்பானை கடையில் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஞானசேகரன்(70) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில், நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் மற்றும் நகர் குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ராஜன்(எ) டோனி(26), ரஞ்சித்குமார்(27), விஜயபிரகாஷ்(24) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story