சென்னிமலை அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்
X
சென்னிமலை அருகே வனப்பகுதியில் முயல் வேட்டைக்காக துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலை அருகே வாய்ப்பாடி புளியம்பாளையம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கியுடன் (ஏர்கன்) 3 நபர்கள் சுற்றி திரிவதாக ஈரோடு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.‌ பின்னர் உடனடியாக ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் சங்ககிரி மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 25), வடிவேல் (வயது 32) மற்றும் பிரகாஷ் (வயது 35) என்றும், இவர்கள் 3 பேரும் முயல் வேட்டைக்காக வந்ததாக வனத்துறை அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இவர்கள் 3 பேரையும் ஈரோடு மாவட்ட வன அலுவலர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 3 பேருக்கும் தலா ரூ.18 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story