குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்

குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்
X
பாலக்கோட்டில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் அபராதம் விதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவலர்கள் இணைந்து,தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்த கோபால், திருப்பதி மற்றும் பாலக்கோடு காவலர்கள், இன்று பாலக்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடைகள், பேக்கரிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் கோயிலூரான் கொட்டாய் பகுதியில் மளிகை கடை, திரவுபதி அம்மன் கோயில் அருகேயுள்ள பெட்டி கடை, கல்கூடப்பட்டியில் உள்ள மளிகை கடை என 3 கடைகளில், சுமார் 2 கிலோ அளவிலான தடை செய்யப் பட்ட குட்காவை கண்டுபி டித்து பறிமுதல் செய்தனர். பின்னர், ஒரு கடைக்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் 3 கடை களுக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 15 நாட்களுக்கு கடை திறக்க தடைவிதித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
Next Story