பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தேனி பெண்கள் உட்பட 3 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தேனி பெண்கள் உட்பட 3 பேர் கைது
X
கொடைக்கானலில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் தேனி பெண்கள் உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த அனிதா(28)இவரது தாய் வீடு தேனி ஜி.கல்லுப்பட்டியில் உள்ளது. வீட்டின் அருகே வசிக்கும் நந்தினி(24), லாவண்யா(24) உடன் நட்பு ஏற்பட்டு 21-ம் தேதி அனிதா,தனது குழந்தைகள் , லாவண்யா, நந்தினி உடன் கொடைக்கானல் சுற்றுலா வந்தார். விடுதியில் தங்கிய போது இரவு மங்கி குல்லா அணிந்தபடி கதவை தட்டிய நபர் கத்தியை காட்டி மிரட்டி மூவரிடமும் 8.1/2 பவுன் நகைகளை பறிந்து தப்பினார் இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அனிதாவின் நகையை அபகரிக்க நந்தினி, லாவண்யா கட்டக்காமன்பட்டியை சேர்ந்த சாந்த குமாரை(22) தயார் செய்து திட்டமிட்டு இதில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்திற்குப்பின் எதுவுமே தெரியாததுபோல நாடமாடியுள்ளனர். இதை தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் நகைகளை மீட்டனர்.
Next Story