விவேகானந்தா கல்லூரி 3-ம் முறையாக சாம்பியன் பட்டம்

விவேகானந்தா கல்லூரி 3-ம் முறையாக சாம்பியன் பட்டம்
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி அளவிலான விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில், வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துவரும் மாணவர்கள், துறை தலைவர் பேராசிரியர் தர்மரஜினி மற்றும் பேராசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த போட்டிக்கான பரிசை கல்லூரி செயலாளர் ராஜன் வழங்கினார். விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ், விளையாட்டு இயக்குநர் ஜான் ரஸ்கின், பேராசிரியர் பாலப்ரியா மற்றும் பலர் மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.
Next Story