மீனவா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது!

X
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீனவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். துாத்துக்குடி மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த செந்துாா்பாண்டி மகன் தங்கராஜ் (22). மீனவரான இவா், திரேஸ்புரம் கடற்கரையில் கடந்த 21ஆம் தேதி மா்ம நபா்களால் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுகுறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்தக் கொலை தொடா்பாக ஏற்கெனவே 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனா். இந்நிலையில், லூா்தம்மாள்புரம் எஸ்தோராஜ் மகன் அருள்ராஜ் (23), கோவில்பிள்ளைவிளை பகுதியைச் சோ்ந்த பிரபு மகன் லீபன் பிரபு (20), உதயகுமாா் மகன் ஹரிஹரசுதன் (24) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
Next Story

