வேளாண் விஞ்ஞானியாவது எனது விருப்பம். 3வது இடம் பிடித்த மாணவி பேட்டி.
வேளாண் விஞ்ஞானியாவது எனது விருப்பம். 3வது இடம் பிடித்த மாணவி பேட்டி. கரூர் வெங்கமேடு பகுதியில் செயல்படும் ஈக்விடாஸ் பள்ளியில் மொத்தம் 69 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், மாணவி சுதிக்க்ஷா 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். மாணவியை பள்ளியின் முதல்வர் ரொபாக்கா பாராட்டி, கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். செய்தியாளரிடம் தெரிவித்த மாணவி சுதிக்க்ஷா, பெற்றோரும் பள்ளி நிர்வாகமும் ஒத்துழைத்ததின் காரணமாக மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாகவும், வருங்காலத்தில் வேளாண் விஞ்ஞானியாவது தனது லட்சியம் என தெரிவித்தார்.
Next Story





