வேப்பனப்பள்ளி அருகே 3 யானைகள் அட்டகாசம்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள நேரலகிரி மற்றும் கொங்கனப் பள்ளி வனப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. நேரலகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் விவசாயி நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள் அங்குள்ள விவசாய பயிரிகளை சேதப்படுத்தி வருகிறது. மூன்று காட்டு யானைகள் தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு அச்சுறுத்தி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் பீதியில் உள்ளனர்.
Next Story

