கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் பலி சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரையில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள கழிவு நீர் தொட்டியை (செப்டிக்டேங்க்) சுத்தம் செய்ய திருப்பூர் சுங்க மேட்டை சேர்ந்த சரவணன் (வயது 27), வெங்கமேட்டை சேர்ந்த வேணு கோபால் (30) மற்றும் ஹரி கிருஷ்ணன் (26). முத்துக்குமார் (36) ஆகிய 5 பேரும் முயன்றனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் 5 பேரும் மயக்கமடைந்து தொட்டிக்குள் விழுந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது சரவணன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் உயிரிழந்து விட்டதாகதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரிகிருஷ்ணன் முத்துக்குமார், சின்னச்சாமி ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ஹரிகிருஷ்ணன் நேற்று இறந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் சாய ஆலை உரிமையாளர் நவீன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி யில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

