வெம்பக்கோட்டையில் நடந்து வந்த 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றது...நுண் கற்காலத்திற்கான சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம்...

வெம்பக்கோட்டையில் நடந்து வந்த 3-ம் கட்ட அகழாய்வு பணிகள்  நிறைவு பெற்றது...நுண் கற்காலத்திற்கான சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம்...
X
வெம்பக்கோட்டையில் நடந்து வந்த 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றது...நுண் கற்காலத்திற்கான சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம்...
வெம்பக்கோட்டையில் நடந்து வந்த 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றது...நுண் கற்காலத்திற்கான சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம்... விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி கடந்த 2022 மார்ச் 16ம் தேதி துவங்கிய முதலாம் கட்ட அகழாய்வில் 3,254 பொருட்களும், 2023 ஏப்ரல் 6ம் தேதி துவங்கிய 2-ம் கட்ட அகழாய்வில் 4,653 பொருட்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 18 முதல் நடைபெற்று வந்த 3-ம் கட்ட அகழாய்வில் 5,003 பொருட்கள் கிடைத்துள்ளன. 3ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணி, சூது பவள மோதிரக்கல், தங்க மணி, கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன உருவ பொம்மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அகேட் வகை அணிகலன், பலவண்ணத்தில் ஆன சங்கு வளையல்கள், உள்ளிட்ட அரியவகை பொருட்கள் கிடைத்திருந்தது. இதன் மூலம் தொன்மையான மனிதர்கள் நவ நாகரீக வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தது, சங்கு வளையல் கூடம் அமைத்துள்ளது, பல்வேறு வெளிநாடுகளில் வாணிப தொடர்பு வைத்துள்ளது, வைப்பாற்றின் வழியாக கடல் வழி வாணிபம் மேற்கொண்டது போன்ற சான்றுகள் கிடைத்துள்ளது. இருப்பினும் அகழாய்வின் முக்கிய நோக்கமான 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையிலான எவ்வித சான்று கிடைக்காததால் தொல்லியல் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே 4ம் கட்ட அகழாய்வு நடைபெறுவது சந்தேகம் எனவும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்
Next Story