சேலத்தில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

X
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் பெரிய கொல்லப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் சூரமங்கலத்தை சேர்ந்த கேசவன் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் சேலம் பள்ளப்பட்டி பெரியேறி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ்(25), சதீஷ்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

