சேலம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

சேலம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி ரெட்டி (வயது 50), விவசாயி. சம்பவத்தன்று இவர் பூசாரிப்பட்டி அருகே உள்ள பேக்கரியில் சிகரெட் வாங்க சென்றார். அப்போது அங்கிருந்த பூசாரிப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (29), ராம் (31), செல்லதுரை (25) ஆகிய 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி சோடா பாட்டில், ஹெல்மெட்டால் சஞ்சீவி ரெட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சீவி ரெட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து விவசாயி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், நாகராஜ், ராம், செல்லதுரை ஆகியோரை கைது செய்தனர்.
Next Story