சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

X
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவருடைய மகன் மணி என்ற மணிகண்டன் (வயது 28), கூலித்தொழிலாளி. இவர் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி, 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அங்கு உள்ள வாழை தோப்பிற்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000-ம் அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்து உள்ளார்.
Next Story

