மது, கஞ்சா.லட்டரி விற்ற 3 பேர் சிக்கினர்

மது, கஞ்சா.லட்டரி விற்ற 3 பேர் சிக்கினர்
X
காங்கேயத்தில் மது, கஞ்சா.லட்டரி விற்ற 3 பேர் சிக்கினர்
காங்கேயம் சுற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒட்டப்பாளையம் அணை அருகே மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், பரிதியூரை சேர்ந்த கதிர்வேலு (வயது 43) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காங்கேயம் பஸ் நிலையம் மற்றும் காங்கேயம் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற திருப்பூரை சேர்ந்த ஷாஜகான் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். காங்கேயம் பஸ் நிலையம் பின் புறம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காங்கேயம் அஹ்கார வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி டோக்கன்களும், ரூ.250-ம் பறி முதல் செய்யப்பட்டது.
Next Story