அரக்கோணத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரக்கோணத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
அரக்கோணம் அம்மனூர் ஆண்டர்சன்பேட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 62), அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (65). அரக்கோணம் அசோக் நகர் பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (55) ஆகிய 3 பேர் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். அவர் கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி விவேகானந்த சுக்லா பரிந்துரையின் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story