தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: 3 பேர் பலி

தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: 3 பேர் பலி
X
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை: 3 பேர் பலி
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன், அன்னை முதியோர் இல்லம் நடத்தி வருகிறார். அங்கு, 60 பேர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உணவு ஒவ்வாமையால், 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ், 48, முருகம்மாள், 45, சொக்கம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா, 40, இறந்தனர். இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக முதியோர் இல்லத்தில் இருந்த, 24 பெண்கள் உள்ளிட்ட 46 பேரும் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டனர். தென்காசி எஸ்.பி., அரவிந்த், சுகாதார அலுவலர் கோவிந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story