ஏற்காட்டில் பரபரப்பு போலீசில் ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம்

ஏற்காட்டில் பரபரப்பு போலீசில் ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம்
X
போலீசார் சமரசம்
ஏற்காடு முருகன்நகர் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா (21) ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு வந்ததால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஏற்காடு போலீஸ் நிலயைத்தில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சந்தோஷ் (22) என்ற வாலிபரும், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களும் பாதுகாப்பு கேட்டு ஏற்காடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். மேலும் ஏற்காடு அருகே டேங்க் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் ஸ்ரீஜா (19) என்ற பெண்ணும், அவருடைய காதலன் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (26) என்பவரும் ஏற்காடு போலீசில் தஞ்சம் அடைந்தனர். இந்த காதல் ஜோடிகளின் பெற்றோரை தனித்தனியாக அழைத்த போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் ஏற்காடு போலீசில் 3 காதல் ஜோடிகள் அடுத்தடுத்து தஞ்சம் அடைந்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
Next Story