சேலத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

X
சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பச்சப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தாதகாப்பட்டியை சேர்ந்த கிருபாகரன் (வயது 29) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், அம்மாப்பேட்டை போலீசார் குஞ்சன்காடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த அமீர் (19) என்பவரை கைது செய்தனர். பழையூர் பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கருப்பூரை சேர்ந்த ராகுல் (25) என்பவரை சூரமங்கலம் ேபாலீசார் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்தும் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

