கோவை: வாலிபர்கள் கடத்தல் - 3 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது !

X
கோவை ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் பணத்துடன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் மதுக்கரை பகுதிக்கு செல்ல ஆட்டோ வாடகை பேசி சென்ற நிலையில், ஆட்டோ ஓட்டுநர்கள் செந்தில்குமார், முகமது அசாருதீன், நவுபால் பாஷா ஆகியோர் வழியிலேயே அவர்களை ஆவாரம்பாளையம் மேம்பாலம் அருகே கடத்தி கொண்டு போய், தாக்கி ரூ.13,000 பறித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தகவலின் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் நேற்று கைது செய்து, சம்பவத்தில் பயன்படுத்திய மூன்று ஆட்டோக்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Next Story

