வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது

வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது
X
நத்தம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது
திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த அழகப்பன்(47) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் 70, வசித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 16- இரவு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறக்க கூறி அதில் நகை, பணம் இல்லாத ஆத்திரத்தில் கத்தியால் அவரின் கழுத்து, கை,கால்களில் சராமரியாக குத்திவிட்டு தப்பினர். இது குறித்து DSP. சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மேலுாரை சேர்ந்த பிரபாகரன்(29), சாந்தகுமார்(28), முத்துவெங்கடாஜலபதி (29), ஆகியோரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story