கஞ்சாவுடன் மாணவர் உட்பட 3 பேர் கைது

கஞ்சாவுடன்  மாணவர் உட்பட 3 பேர் கைது
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று குமாரபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று வாலிபர்களை தடுத்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் 1கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில்  அவர்கள் ராகுல் (22) விக்னேஷ் (20), பாலாஜி (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து கஞ்சாவை வாங்கி குமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய கடத்தி வந்துள்ளனர். போலீசார் கஞ்சா,  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து  3 பேரும் கைது செய்தனர். இதில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2 ம் ஆண்டு மாணவராகும்.
Next Story