கோவை: 3 லட்சம் தங்க நகை மோசடி !

கோவை: 3 லட்சம் தங்க நகை மோசடி !
X
தோழியிடம் தங்க நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த புஷ்பலதா (54) என்பவரிடம், காரமடை பகுதியைச் சேர்ந்த அமுதா (44) குறைந்த விலையில் புதிய தங்க நகை வாங்கித் தருவதாக கூறி பழைய நகைகளை பெற்றுக் கொண்டார். 59 கிராம் நகையை பெற்ற பிறகு, புஷ்பலதா பெயரில் நிதி நிறுவனத்தில் அவற்றை அடகு வைத்து ரூ.2.95 லட்சம் கடன் வாங்கிய அமுதா, அதன் பிறகு நகைகளை மீட்டு கொண்டு விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய நகைகள் வாங்கிக் கொடுக்காமல் இருந்ததால், புஷ்பலதா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா வழக்குப்பதிவு செய்து, நேற்று அமுதாவை கைது செய்தார். மோசடி செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
Next Story