அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் - வானிலை ஆய்வு மையம்

X
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமில்லை. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 41.5° செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி: 22.5° செல்சியஸூம் பதிவாகியுள்ளது. அதேபோல, மதுரை, ஈரோடு, பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 - 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (22-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (23-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. வங்கக்கடல் பகுதிகள்: ஜூன் 22: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும்; இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 23: மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 24: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 25: மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஜூன் 26: மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். அரபிக்கடல் பகுதிகள்: அடுத்த ஐந்து நாள் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும்; இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும்; இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

