முத்தூர் அருகே தெருநாய் கடித்து 3 செம்மறி ஆடுகள் பலி

X
முத்தூர் அருகே வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட கரைவலசு கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 50). விவசாய பணிகள் செய்து கொண்டு 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் தனது ஆடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு மீண்டும் மாலை ஆட்டு பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஆட்டு பட்டிக்குள் தெரு நாய் ஒன்று திடீரென்று புகுந்து அங்கிருந்த செம்மறி ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 2 ஆடுகள் பலத்த காயம் அடைந்த நிலையில் மரண பயத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தது.காலை 6 மணிக்கு அர்ச்சுனன் குடும்பத்தினர் தோட் டத்திற்கு வந்து பார்த்த போது தெரு நாய் கடித்து 3 செம் மறி ஆடுகள் ஆங்காங்கே உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பலத்த காயம் அடைந்த 2 ஆடுகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குட்டப்பாளையம் அரசு கால்நடை மருத்துவர் குழுவினர் மூலம் உயிரிழந்த 3 ஆடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
Next Story

