காங்கேயம் அருகே 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வரை ஊதியூர் காவல் துறை கைது செய்தனர்

காங்கேயம் அருகே 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வரை ஊதியூர் காவல் துறை கைது செய்தனர்
X
காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் சோதனை செய்ததில் அப்போது கொடுவாய் அருகே செட்டிபாளையம் பகுதியில் பாண்டி முருகன் (44) வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 2.5 சவரன் நகைகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
காங்கேயம் அடுத்துள்ள ஊதியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவலர்கள் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடுவாய் அருகே செட்டிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாண்டி முருகன் (வயது 44) என்பவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால்  காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் பாண்டி முருகன் மதுரையை சேர்ந்தவர் என்பதும் தற்போது கொடுவாய் செட்டிபாளையம் அருகே வஞ்சிபாளையம் பிரிவில் குடியிருந்து வருவதாகவும் இவர் மீது திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்தது. இதை அடுத்து வீட்டை சோதனையிட்டதில் 3 கிலோ கஞ்சா, மற்றும் மோதிரம் - 4, கொலுசு -1செட், கழுத்து செயின் ஓம் டாலர் -1, நெக்லஸ் -1, மூக்குத்தி- 3, தோடு -2 செட்டு , தாலி- 1 செட்டு, சின்ன சைன் -1 ஆகியவற்றை ஊதியூர் காவல் துறையினர் கைப்பற்றினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாண்டி முருகனை தாராபுரம் சிறையில் அடைத்தனர்.  தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் அதிக போதை தரும் கஞ்சா விற்பனைகள் தற்போது காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக புழக்கத்தில் இருந்து வருவது வேதனைக்கு உரியது என்கின்றனர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் .
Next Story