தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
X
சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜாக்கி மூலம் ரேனியஸ் கன்வென்சன் கூட்டம் மேடையை 3 அடி உயர்த்தி அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜாக்கி மூலம் ரேனியஸ் கன்வென்சன் கூட்டம் மேடையை 3 அடி உயர்த்தி அமைக்கும் பணி இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலய வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரேனியஸ் கன்வென்சன் கூட்ட மேடை உள்ளது. தற்போது ஆலயத்தை சுற்றியுள்ள சாலை உயர்ந்து போனதால் மழை காலத்தில் மழை நீர் மேடை சூழ்ந்து பாதிக்கும் நிலை வந்துள்ளது. அதனை இடித்து புதியதாக கட்டாமல் ஜாக்கி மூலம் அதன் அடிப்பகுதியில் 3 அடி உ.யர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேடை அடிப்பாகத்தை சுற்றி ஜாக்கி அமைத்து உயர்த்தி அமைக்கும் பணியை சேகர குருவானவர் டேவிட் ஞானையா ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் திருமண்டல முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் குணசீலன், கிருபாகரன், சேகர செயலாளர் வக்கீல் தியோனிஸ் சசிமார்சன், பொருளாளர் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணியில் 20க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.
Next Story