சேலத்தில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

X
சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மூணாங்கரடு தண்ணீர் டேங்க் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மல்லூரை சேர்ந்த தினகரன் (வயது 20), தரணிதரன் (19) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று சேலம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

