கோவை: 3வது செயற்கை இழை கருத்தரங்கு துவக்கம் !

கோவை அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் 3rd Man Made Fibre Conclave துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் 3rd Man Made Fibre Conclave துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி தொழில் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவுளி தொழில்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர், கோவை மற்றும் திருப்பூர் பகுதிகள் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுவதாக கூறினார். மேலும், மத்திய அரசு ஜவுளி துறைக்கு பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாகவும், production linked incentive திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை என தெரிவித்தார். இந்நிகழ்வின் பின்னர், தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சர் உறுதியளித்தார்.
Next Story