வாணியம்பாடி பழிக்கு பழி வாங்க கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் மேலும் 3 பேர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இறந்த தம்பியின் பிறந்தநாளான்று தம்பியை கொலைசெய்தவரை பழிக்கு பழி வாங்க கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் மேலும் 3 பேர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பழைய காலணி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் நரசிம்மன் (வயது 17) சிறுவன் மணல் கொள்ளை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அம்பலூர் பகுதியைச் சேர்ந்த அசோக் மற்றும் இவரது நண்பர்கள் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அடித்து கொலை செய்து வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்ற நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கைது! செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்கில் கைதான அசோக்குமார் சிறையில் இருந்து வெளியாகி அம்பலூர் பகுதியிற்கு வந்த நிலையில், இதனை கண்ட நரசிம்மனின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நரசிம்மின் பிறந்தநாளான்று அசோக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டி கடந்த 03.07.2025 அன்று அசோக்குமாரை நரசிம்மனின் சகோதரர் பெருமாள், மற்றும் அவரது நண்பர்கள் அரவிந்த, தனுஷ், ஆகியோர் அசோக்குமார் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவரை வழிமறித்து தாக்கி அசோக்குமாரின் கை, கால்களை கட்டி கொடையாஞ்சி பாலாற்றில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர், அப்பொழுது அசோக்குமார் இறந்து விட்டதாக கருதி பெருமாள் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து சென்ற நிலையில், அசோக்குமார் ரத்த வெள்ளத்துடன் இருப்பதை அறிந்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அசோக்குமாரின் உறவினர்கள் அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், பின்னர் அசோக்குமாரை மருத்துவர்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த விஷ்ணு மற்றும் நாச்சியார்குப்பம் பகுதியை சேர்ந்த இளவரசனை காவல்துறையினர் கைது செய்த சிறையில் அடைத்த நிலையில் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்த், தனுஷ் மற்றும் அம்பலூர் பகுதியை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

