நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் !

X
தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஜூலை 15, 16, 17 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்றும், இந்நாட்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக மலைப்பாதைகள் மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story

