துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பியவர் உள்பட 3 பேருக்கு போலீசார் வளைவீச்சு.ஒருவர் கைது. ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.

X
அரியலூர், ஜூலை.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு ஆயுதங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமோகன் . இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் இடையே இடத் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்த வந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்மோகனின் தாயார் மங்கையர்க்கரசியை. நடராஜன், நீதிமணி சதாசிவம் ஆகியோர் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் மங்கையர்க்கரசியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த மங்கையர்க்கரசி ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மங்கையர்கரசியின் மருமகளும், ராஜ்மோகனின் மனைவியுமான இளவரசி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடராஜன், நீதிமணி, சதாசிவம், கீர்த்திவாசன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிந்து, நீதிமணி (32) என்பவரை கைது செய்தும் மங்கையர்க்கரசியை தாக்கி விட்டு தப்பி ஓடிய நடராஜன், சதாசிவம், மற்றும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடிய கீர்த்திவாசன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.
Next Story

