வேப்பனப்பள்ளி: கிரானைட் கற்கள் கடத்திய 3 டாரஸ் லாரிகள் பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி வருவாய்துறை அலுவலர்கள் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்னர். அப்போது சிகரலப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேரலகிரியில் இருந்து கே.ஜி.எப்., செல்லும் சாலையில் நின்று இருந்த 3 டாரஸ் லாரி களை சோதனை செய்த போது அதில் 13 ராட்சத கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வட்டாட்சியர் சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராட்சத கிரானைட் கற்களுடன், 3 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

