கபிலர்மலை ஒன்றியம் 3 ஆக பிரித்து திமுக புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.

நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் 3 ஆக பிரித்து திமுக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து தலைமைக் கழக அறிவிப்பு வெளியிட்டுள்ளது
பரமத்தி வேலூர், ஜூலை.18: நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் 20 ஊராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகள் அடங்கி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கபிலர்மலை வடக்கு, கபிலர்மலைமத்திய,கபிலர்மலை தெற்கு ஆகிய ஒன்றியங்கலாக பிரித்து திமுக ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கபிலர்மலை வடக்கு ஒன்றியதில் குப்பிரிக்காபாளையம், பெருங்குறிச்சி,சுள்ளிபாளையம்,சோழசிராமணி,ஜமீன்எளம்பளளி,குரும்பலமகாதேவி,கொத்தமங்கலம் ஆகிய 7 ஊராட்சிகள் தனியாக பிரித்து திமுக ஒன்றிய பொறுப்பாளராக தளபதி மா.சுப்பிரமணியம். கபிலர்மலை மத்திய ஒன்றியம் திடுமல்,தி.கவுண்டம்பாளையம், சிறுநல்லிகோவில்,கபிலக்குறிச்சி,பெரியசோளிபாளையம், வடகரையாத்தூர் ஆகிய 6 ஊராட்சிகள் அடங்கிய பகுதிக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளராக எம்.சரவணக்குமார். கபிலர்மலை தெற்கு ஒன்றியம் இருக்கூர்,ஆனங்கூர்,குன்னத்தூர்,பிலிக்கல்பாளையம்,சேளூர்,கொந்தாளம்,கோப்பனம்பாளையம் ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர் ஆகிய 3 பேரூர்கள் அடங்கிய பகுதிக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளராக பி.பி.சாமிநாதன் ஆகியோரை திமுக ஒன்றியக் கழகப் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Next Story