கோவையில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – ஆரஞ்சு எச்சரிக்கை

X
கோவை மாவட்டத்தில் எதிர்வரும் 3 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை மைய அதிகாரி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்: “தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை சராசரியாக 210 மிமீ. பெய்யும். இந்த ஆண்டு இதுவரை 45 மிமீ. மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 42 மிமீ. மழை பெய்தது. தற்போதைய நிலவரத்தில் கோவையில் 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வால்பாறை, சின்னக்கல்லாறு, சிறுவாணி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 21 மற்றும் 22-ந்தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என வருவாய் துறை வலியுறுத்தியுள்ளது.
Next Story

