கோவை: சேவல் சண்டை சூதாட்டம்: 3 பேர் கைது !

கோவை: சேவல் சண்டை சூதாட்டம்: 3 பேர் கைது !
X
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாடியதாக மணிகண்டன் (27), தினகரன் (24), கிருஷ்ணமூர்த்தி (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவுந்தம்பாளையம் போலீசார் ரோந்து பணியின் போது சம்பவம் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 சேவல்கள் மற்றும் ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story