உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் காது கருவி கேட்டு மனு கொடுத்த பள்ளி மாணவிக்கு 3 நாட்களில் நடவடிக்கை எடுத்த ஆட்சியர்

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் காது கருவி கேட்டு மனு கொடுத்த பள்ளி மாணவிக்கு 3 நாட்களில் நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
X
காது கருவி வழங்கிய தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்த பள்ளி மாணவியும் பெற்றோர்களும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பூலாம்பாடியைச் சேர்ந்த சௌந்தராஜன் தனது காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தை சபரிவாணிக்கு காதொலிக்கருவிகேட்டு விண்ணிப்பித்திருந்த நிலையில் மூன்றே நாட்களில் அவரின் மனுவின் மீது தீர்வுகண்டு அந்த மாணவிக்கு இன்று காதொலிக்கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண் ராஜ் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட் உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
Next Story