திருச்சி: கஞ்சாவுடன் 3 பேர் கைது

திருச்சி: கஞ்சாவுடன் 3 பேர் கைது
X
தப்பியோடிய இரண்டு பேருக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி. மயானம் அருகே அரியமங்கலம் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த 5 பேரில் 2 பேர் தப்பி ஓடினர். 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி கதிரேசன் (25), சபரிநாதன் (19), சிக்கந்தர் பாஷா (21) என்பதும், தப்பி ஓடியவர்கள் தீபக் (19), கவிராஜன் (19) என்பதும், 5 பேரும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
Next Story