மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

X
குமரி மாவட்டத்தில் மலையோர கிராம பகுதிகளில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், புத்தன்கடை அருகே புதுக்கோடு பகுதியை சேர்ந்த நெல்சன் என்பவரது வீடு உள்ளது. அவர் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின் புறம் 3 ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலையில் பார்த்த போது ஆடுகளை மர்ம விலக்கு கடித்து இழுத்து சென்றது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து நெல்சன் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, விசாரித்தனர்.
Next Story

