சிவகாசி அருகே 3 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு....அடுத்தடுத்த கொலையால் அச்சத்தில் சிவகாசி மக்கள்

சிவகாசி அருகே 3 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு....அடுத்தடுத்த கொலையால் அச்சத்தில் சிவகாசி மக்கள்
X
சிவகாசி அருகே 3 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு....அடுத்தடுத்த கொலையால் அச்சத்தில் சிவகாசி மக்கள்
சிவகாசி அருகே 3 நாட்களுக்கு முன் மாயமான இளைஞர் காட்டுப்பகுதிக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்பு....அடுத்தடுத்த கொலையால் அச்சத்தில் சிவகாசி மக்கள்.... சிவகாசி அருகே எம் புதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் 21. கூலி வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மாயமானார். இது குறித்து தர்மராஜன் தந்தை செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் புதுப்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் எம்.புதுப்பட்டியிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முட்புதருக்குள் ரத்த வெள்ளத்தில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் பாபு என்பவருக்கும் கொலையுண்ட தர்மராஜ் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதால் முன்பகை காரணமாக தினேஷ் பாபு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரை தேடுகின்றனர். சிவகாசியில் நேற்று முன்தினம் கணேஷ் பாண்டி என்ற இளைஞர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு கொலை நடந்துள்ளது சிவகாசி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story