வாணியம்பாடி அருகே 3 கோடியில் கட்டப்பட்ட சிறுவிளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

X
திருப்பத்தூர் மாவட்டக் வாணியம்பாடி அருகே 3 கோடியில் கட்டப்பட்ட சிறுவிளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மேம்பாட்டு ஆணையம் சார்பில், கட்டப்பட்ட பல்வேறு வசதிகளுடன்,கூடிய விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தனர் அதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி நிலையத்துடன் கூடிய பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கத்தை திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தனர், இதில் உள்ளாட்சி பிரநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story

