சிவகாசியில் 3வது நாளாக பிரபல பட்டாசு ஆலை நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது

X
சிவகாசியில் 3வது நாளாக பிரபல பட்டாசு ஆலை நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. வரி ஏய்ப்பு புகாரில் சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு ஆலை நிறுவனங்களான காளீஸ்வரி மற்றும் சோனி நிறுவன தலைமை அலுவலகங்களில் இன்று மூன்றாவது நாளாக வருமானவரித்துறையினரின் சோதனை தொடர்கிறது. முன்னதாக இந்நிறுவனங்களின் பங்குதாரர்கள் வீடுகளில் முதல் நாள் சோதனை நடைபெற்ற நிலையில் ஒரே நாளில் அங்கு சோதனை விலக்கிக்கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்த இருவேறு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை கணக்கில் வராத பணமோ, நகையோ கைப்பற்றப்படாத நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
Next Story

