துரோணா 3-ம் கண் யோகா மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி

X
துரோணா 3-ம் கண் யோகா பஞ்சபூத குருகுலம் சார்பில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கெட் போட்டி, கலர் அடித்தல், எழுதுவது, படிப்பது, படம் வரைதல், ஹல்டு ஜம்ப் ஆகிய உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி சேலம் வெள்ளக்கல்பட்டி பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு துரோணா 3-ம் கண் யோகா மைய நிறுவனர் அருள்முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் அர்த்தனாரி, சசிக்குமார், முத்துராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் 44 பேருக்கு உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ்களை டாக்டர் சிவராமகிருஷ்ணன் வழங்கினார்.
Next Story

