சேலம் வீராணம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

X
சேலம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கோரிமேட்டை சேர்ந்த சிவாஜி மகன் பிரசாந்த் (28), வலசையூரை சேர்ந்த கதிர்வேல் மகன் ராம்குமார் (25), ஆத்துக்காட்டை சேர்ந்த அல்டாமிஷ் மகன் சுராஜ் பர்வேஸ் (19) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

