தஞ்சாவூரி நாளை செப்.3 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

X
தஞ்சாவூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் 03.09.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ய நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு 1,2,3 ஆகிய பகுதிகளில் கரந்தை கரந்தை தமிழ்ச்சங்கத்திலும், பேராவூரணி பேரூராட்சி வார்டு 1 முதல் 9 ஆகிய பகுதிகளில் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், திருவையாறு வட்டாரம் கருப்பூர், கீழத்திருப்பந்துருத்தி, வளப்பக்குடி, திருவாலம்பொழில், கோனேரிராஜபுரம் கீழத்திருப்பந்துருத்தி புனித ஆரோக்கிய மாதா சமுதாயக்கூடத்திலும், கும்பகோணம் வட்டாரம் மருதாநல்லூர், தில்லையம்பூர், திப்பிராஜபுரம் ஆகிய பகுதிகளில் திப்பிராஜபுரம் கிராம பொது சேவை மைய கட்டிடத்திலும், திருப்பனந்தாள் வட்டாரம் கதிராமங்கலம், கூத்தனூர், முள்ளுக்குடி, மகாராஜபுரம் ஆகிய பகுதிகளில் கதிராமங்கலம் கிராம பொது சேவை மைய கட்டிடத்திலும், பட்டுக்கோட்டை வட்டாரம் ஏனாதி, பாளமுத்தி, நம்பிவயல், சாந்தாங்காடு, வீரக்குறிச்சி, வேப்பங்காடு ஆகிய பகுதிகளில் ஏனாதி கிராம பொது சேவை மைய கட்டிடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

