பெண்ணைத் திட்டிய 3பேர் மீது வழக்கு 

பெண்ணைத் திட்டிய 3பேர் மீது வழக்கு 
X
கருங்கல்
குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் சோபிகா (45). அதே பகுதியை சேர்ந்த பிரின்சிலி, மேரி பாக்கிய மரிய செல்வி, சுனிதா ஆகியோர்  கடந்த ஜனவரி மாதம்  சோபிகாவை அசிங்கமாக திட்டியதோடு, சாதியை கூறி இழிவாக பேசி பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கருங்கல் காவல் நிலையத்தில் சோபிகா புகார் அளித்தும் , போலீசார் நடவடிக்கை எடுக்காததால்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது .நீதிமன்ற உத்தரவின் படி பிரின்சிலி, மேரி பாக்கிய மரிய செல்வி, சுனிதா ஆகியோர் மீது கருங்கல் போலீசார் 8 மாதங்களுக்கு பின்பு நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
Next Story