பல்லடம் அருகே போதை ஊசி விற்பனை - 3 இளைஞர்கள் கைது

பல்லடம் அருகே போதை ஊசி விற்பனை - 3 இளைஞர்கள் கைது
X
பல்லடம் அருகே போதை ஊசி விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது
கஞ்சா மற்றும் போதை மாத்திரை,ஊசிகளை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார் - ஒருவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது……… திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதை ஊசி விறபனை நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் உத்தரவை அடுத்து பல்லடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.இதில் கணபதிபாளையத்தை சேர்ந்த யூசிப் முகமது (24),சையது அலி (19) மற்றும் மகாலட்சுமி நகரை சேர்ந்த கெளதம் ராஜா ஆகியோர் போதை ஊசிகளை பயன் படுத்தி வந்ததும்,அதனை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.அதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட மாத்திரைகள் வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடம்பில் ஏற்றி போதைக்காக பயன்படுத்தி வந்ததும் மேலும் அதனை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 30 கிராம் கஞ்சா,போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதில் யூசிப் முகமது மற்றும் சையது அலி இருவரும் சகோதரர் ஆவார்கள்.கெளதம் ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story